1. [QS]நான் சரோனில் பூத்த ரோஜா. [QE][QS2]பள்ளத்தாக்குகளில் மலர்ந்த லீலிபுஷ்பம்! [QE]
2. {#1அவன் பேசுகிறான் } [QS]எனது அன்பே! முட்களுக்கு இடையில் லீலி புஷ்பம்போல் [QE][QS2]நீ மற்ற பெண்களுக்கிடையில் இருக்கிறாய். [QE]
3. {#1அவள் பேசுகிறாள் } [QS]என் அன்பரே! காட்டு மரங்களுக்கிடையில் [QE][QS2]கிச்சிலி மரத்தைப்போல் மற்ற ஆண்களுக்கிடையில் நீர் இருக்கிறீர். [QE]{#1அவள் பெண்களுடன் பேசுகிறாள் } [QS]எனது நேசரின் நிழலில் உட்கார்ந்துகொண்டு நான் மகிழ்கிறேன். [QE][QS2]அவரின் கனி எனது சுவைக்கு இனிப்பாக உள்ளது. [QE]
4. [QS]என் நேசர் என்னை விருந்து சாலைக்கு அழைத்துப்போனார். [QE][QS2]என்மீதுள்ள நேசத்தை வெளிப்படுத்துவதே அவரது நோக்கம். [QE]
5. [QS]காய்ந்த திராட்சையினால் செய்யப்பட்ட பலகாரத்தால் என்னைப் பலப்படுத்துங்கள். [QE][QS2]கிச்சிலிப் பழங்களால் எனக்குப் புத்துணர்ச்சி ஊட்டுங்கள். [QE][QS2]ஏனென்றால் நான் நேசத்தினிமித்தம் பலவீனமாகியுள்ளேன். [QE]
6. [QS]என் நேசரின் இடதுகை என் தலையின் கீழுள்ளது. [QE][QS2]அவரது வலது கை என்னை அணைத்துக்கொள்கிறது. [QE]
7. [QS]எருசலேமின் பெண்களே, நான் தயாராகும்வரை, [QE][QS2]நீங்கள் என் அன்பை விழிக்கச் செய்யாமலும், அல்லது எழுப்பாமலும் இருக்க மான்கள் மீதும் காட்டு மான்கள் மீதும் வாக்குறுதி கொடுங்கள். [QE]
8. {#1அவள் மீண்டும் பேசுகிறாள் } [QS]நான் என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன். [QE][QS2]இங்கே அது வந்தது. [QE][QS2]மலைகளுக்கு மேல் துள்ளி வந்தது. [QE][QS2]குன்றுகளுக்குமேல் சறுக்கி வந்தது. [QE]
9. [QS]என் நேசர் வெளிமான் [QE][QS2]அல்லது குட்டி மானைப் போன்றவர். [QE][QS]அவர் எங்கள் சுவற்றுக்குப் பின்னால் நிற்பதையும், [QE][QS2]ஜன்னல் திரையின் வழியாகப் பார்ப்பதையும் நீங்கள் பார்க்கலாம். [QE]
10. [QS]என் நேசர் என்னிடம், “எழுந்திரு என் அன்பே! என் அழகே! [QE][QS2]வெளியே போகலாம். [QE]
11. [QS]பார், மழைக்காலம் போய்விட்டது. [QE][QS2]மழை வந்து போனது. [QE]
12. [QS]பூமியில் பூக்கள் மலர்ந்துள்ளன. [QE][QS2]இது பாடுவதற்குரிய காலம். [QE][QS2]கவனி, புறாக்கள் திரும்பிவிட்டன. [QE]
13. [QS]அத்தி மரங்களில் காய்கள் தோன்றியுள்ளன. [QE][QS2]திராட்சைக் கொடிகள் மணம் வீசுவதை நுகர்ந்துபார். [QE][QS]எழுந்திரு என் அன்பே, அழகே, [QE][QS2]நாம் வெளியே போகலாம். [QE]
14. {#1அவன் பேசுகிறான் } [QS]என் புறாவே நீ கன்மலையின் வெடிப்புகளிலும் [QE][QS2]மலைகளின் மறைவிடங்களிலும் மறைந்துள்ளாய். [QE][QS]உன்னைப் பார்க்கவிடு, [QE][QS2]உன் குரலைக் கேட்கவிடு, [QE][QS]உன் குரல் மிக இனிமையானது. [QE][QS2]நீ மிக அழகானவள்” என்று கூறுகிறார். [QE]
15. {#1அவள் பெண்களுடன் பேசுகிறாள் } [QS]திராட்சை தோட்டங்களை அழிக்கிற சிறு நரிகளையும், [QE][QS2]குழிநரிகளை எங்களுக்காக பிடியுங்கள். [QE][QS2]நம் திராட்சைத் தோட்டங்கள் இப்போது பூத்துள்ளன. [QE]
16. [QS]என் நேசர் எனக்குரியவர். [QE][QS2]நான் அவருக்குரியவள். [QE]
[QS2]17. பகல் தனது கடைசி மூச்சை சுவாசிக்கும்போதும், [QE][QS2]நிழல் சாயும்போதும், அவர் லீலி மலர்களுக்கிடையில் மேய்கிறார். [QE][QS]என் அன்பரே திரும்பும், [QE][QS2]இரட்டைக் குன்றுகளின் பகுதிகளிலுள்ள வெளிமான்களைப் போலவும், [QE][QS2]குட்டி மான்களைப் போலவும் இரும். [QE]